8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி

549பார்த்தது
8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி
'ஒத்த ஓட்டு முத்தையா' என்று பெயரிடப்பட்டுள்ள முழுநீள நகைச்சுவை படத்தில் நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம்புலி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் ' டப்பிங் ஸ்டுடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். அங்கு தொடர்ந்து 8 மணி நேரம் உற்சாகமாக கவுண்டமணி டப்பிங் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி