கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

70பார்த்தது
கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு போலீசாருக்கு திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. போலீசார் உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவினரை அனுப்பி அந்த வளாகத்தை சோதனையிட்டனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'இது போலியான அழைப்பு. கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி