அயோத்தியில் கட்
டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில்
பிரதமர் மோடி கலந்துகொண்டு ராமருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினா
ர். ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நாட்டில் உள்ள பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் தப்தலை கிராமத்தில்
பாஜக ஆதரவாளர்கள் சிலர் 'ஜெய்ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டு, தேவாலயத்தின் மேல் ஏறி,
சிலுவையில் காவி கொடியை ஏற்றியுள்ளனர். இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.