அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி - கனிமொழி

59பார்த்தது
அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி - கனிமொழி
அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். கோவையில் துடியலூர் பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் தீர்க்கப்படும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி