ஜேபி நட்டா இல்லத்தில் பாஜக தலைவர்கள் ஆலோசனை

76பார்த்தது
ஜேபி நட்டா இல்லத்தில் பாஜக தலைவர்கள் ஆலோசனை
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜுன் 4) காலை தொடங்குகிறது. இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வீட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தாவ்டே, மனோகர் லால் கட்டார், அஷ்வினி வைஷ்ணவ், தருண் சுக், சிவபிரகாஷ், மன்சுக் மாண்டவியா மற்றும் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி