பாஜகவுக்கு ரூ. 30 கோடி நன்கொடை - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

59பார்த்தது
பாஜகவுக்கு ரூ. 30 கோடி நன்கொடை - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
டெல்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரியவந்துள்ளது. கடந்த 2022 நவம்பரில் Aurobindo Pharma நிறுவனத்தின் இயக்குனர் சரத்ரெட்டி கைதான நிலையில், அந்நிறுவனம் ரூ‌.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. மேலும் கடந்த 2023 ஜுன் மாதத்தில் அப்ரூவராக மாறுவதாக சரத்ரெட்டி கூறிய பிறகு, Aurobindo Pharma நிறுவனம் மேலும் ரூ.25 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித்ததும் தெரியவந்துள்ளது. தற்போது சரத்ரெட்டி ஜாமினில் உள்ளார். இது தொடர்பான வழக்கில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.