சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய பாஜக நிர்வாகி!

88773பார்த்தது
சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ். சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு, தனது உணவகத்திற்குள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை திட்டமிட்டு பரப்பியதாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக ஐடி பிரிவு செயலாளர் ராஜேஷின் வீட்டிற்கு ஆதரவாளர்களுடன் சென்ற சுப்பையா கடுமையாக தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த ராஜேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுப்பையா மீது அவதூறாக பேசுதல், தானாக சென்று தாக்குதல் நடத்தியது, மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.