திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், கோடை விடுமுறைக்கு பிரபலமான இடமாகும். இங்கு, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆனால், அந்த சாலையில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும் என்பதால், வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று நடுரோட்டில் இரண்டு காட்டெருமைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுள்ளன. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.