பெங்களூரு குண்டுவெடிப்பு - பஸ்ஸில் வந்த குற்றவாளி (வீடியோ)

552பார்த்தது
பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு, குண்டுவைக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் மர்ம நபர், கர்நாடகப் பேருந்தில் ஏறிப் பயணித்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் கபேயில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கி 11.34 மணிக்கு அந்த நபர் கபேக்குள் நுழைகிறார். 11.43 மணியளவில் கபேயில் இருந்து வெளியேறி, 1 கிலோ மீட்டருக்கு மேல் நடந்துசென்று, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தை அடைந்துள்ளார். பின்பு, அங்கிருந்த பொதுப் பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி