இஞ்சி டீ குளிர்காலத்தில் உடலை வெப்பமாக்குவது மட்டுமின்றி இன்னும் பல நன்மைகளையும் தருகிறது. இஞ்சி டீ நமது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள இயற்கையான கூறுகள் மன சோர்வையும், சோகத்தையும் குறைத்து நம்மை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். இந்த டீயை குடிப்பதன் மூலம் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்தவும், சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.