பிசிசிஐ என்னை அணுகியது: ரிக்கி பாண்டிங்

61பார்த்தது
பிசிசிஐ என்னை அணுகியது: ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங், இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆர்வமாக உள்ளாரா என்பதை அறிய பிசிசிஐ தன்னை அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளார். '"தேசிய அணியின் பயிற்சியாளராக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அது எனது தற்போதைய வாழ்க்கை முறைக்கு சிறப்பாக அமையாது. ஒரு பயிற்சியாளர் ஒரு வருடத்தில் 10-11 மாதங்கள் அணியுடன் இருக்க வேண்டும். ஐபிஎல்லிலும் வேலை செய்யக்கூடாது. மேலும் எனது வீட்டில் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். அதனால்தான் இந்த வாய்ப்பை நிராகரிக்க விரும்புகிறேன்’’ என்றார்.

தொடர்புடைய செய்தி