அனுமான் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் மாரடைப்பால் பலி

74295பார்த்தது
அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதுபோல ஹரியானாவில் நடைபெற்ற ராம் லீலா என்ற நாடகத்தில் அனுமன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ஹரீஸ் மேத்தா என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமரிடம் ஆசீர்வாதம் வாங்குகின்ற காட்சியில் காலில் விழுந்தவர் எழுதுகொள்ளவே இல்லை. அதை நடிப்பு என்று அனைவரும் நினைத்துள்ளனர். ஆனால் பின்னர் அவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி