திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

திருச்சி: பெட்ரோல் ஊற்றிய கொலை முயற்சி - மனைவி இன்று உயிரிழப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56)விவசாயி இவரது மனைவி ஹேமா பிந்து (50) மகன்கள் குணசேகர் ( 20 ) குருசாமி (20). கடந்த 20ம் தேதி ஹேமா பிந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர பிரசாத் வீட்டில் வாகனத்திற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர்களின் மீது விசிறி உள்ளார். அப்பொழுது சாமி அறையில் எரிந்து கொண்டிருந்த தீ தாக்கி உள்ளது. இதில் கணவர் ராஜேந்திர பிரசாத் மற்றும் மனைவி ஹேமா பிந்து ஆகிய இருவரும் தீயக்காயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ஹேமா பிந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கணவர் ராஜேந்திர பிரசாத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீடியோஸ்


திருச்சிராப்பள்ளி