குடிபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்: வீடியோ

56பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜர் நகரைச் சேர்ந்த பட்டுசாமி மகன் பாலு. இவர் முன்னாள் நகராட்சி துப்புரவு பணியாளராக வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும் குடி பழக்கத்திற்கு அடிமையான பாலு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் குடிபோதையில் இருந்த பாலு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக கூச்சலிட்டார். அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத் தொடர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டி மேல் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போக்கு காட்டிய பாலு குடிபோதையில் தாம் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் மிகவும் ஆபத்தான நிலையில் அந்தரத்தில் நின்று கொண்டு அங்கும் இங்குமாக அலைந்தார். ஒரு கட்டத்தில் தவறி கீழே விழுந்து விடுவாரோ என்று பொதுமக்கள் மற்றும் போலீசார் செய்வதரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் மேலே சென்ற தீனப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து கயிற்று மூலம் கட்டி பின்னர் ஒருவழியாக பத்திரமாக கீழே இறக்கினர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவரை பத்திரமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி