அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள செங்குந்தபுரம் சில்லறை ஆண்டவர் கோயில் பின்புறம் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பூட்டிக் கிடந்த குடோனை திறந்து பார்த்தபோது, அங்கு சட்ட விரோதமாக 6 டன் எடையுள்ள 115 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து குடோனில் பதிக்க வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து குற்ற சம்பளத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.