முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்கு

73பார்த்தது
முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்கு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (60) விவசாயி. கீழப்பழூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் ( 37 ) சம்பவத்தன்று சுந்தர்ரேசபுரத்தில் நடந்த ஒரு இறப்பு நிகழ்ச்சியில் இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜகோபால் வெடி வெடிப்பதற்காக கலியபெருமாளுக்கு சொந்தமான இடத்தில் மூங்கில் முட்களாலான சுற்றுப்புற வேலியில் நாட்டு வெடிகளை கட்டி வெடிப்பதற்கு ராஜகோபால் முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வந்த கலியபெருமாள் வேலிகளில் வெடிகளை கட்டி வெடித்தால் வேலி தீப்பற்றிக் கொள்ளும் அதனால் வேலிகளில் வெடிகளை கட்டி வெடிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பின்பு வாக்குவாதம் முற்றிய போது ராஜகோபால் கலியபெருமாளை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் கலியபெருமாளின் மகன் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி