அரியலூர் - Ariyalur

கிறிஸ்தவ பாதிரியார்கள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் என்னும் அழகான கிராமத்தில் இந்து கோவில்களும், கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமி. இப்படி பல்வேறு சிறப்புகள் உடைய இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் கும்பாபிஷேக விழாவை நடத்த ஊர் பொதுமக்கள் திட்டமிட்டு, ஒரே நாளில் கும்பாபிஷேக விழாவை நடத்த முன்வந்தனர். இவ்விழாவிற்கு கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் இந்து கிராம மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் நடுவலூர் புனித சூசையப்பர் ஆலய பாதிரியார்கள் ராபர்ட் மற்றும் ஜோசப் தன்ராஜ் ஆகிய இருவரும் தங்களுக்கே உரித்த பானியில், பாரம்பரிய உடையோடு கம்பீரமாக நடந்து கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களை பார்த்து அங்கு திரண்டு நின்ற கிராம மக்கள் ஒரு சேர திரண்டு நின்று அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் புனித நீர் ஊற்றும் அந்த கோவிலின் விமான கலச உச்சிக்கு சென்று இந்துக்களின் புனித்தை மதித்து, கும்பாபிஷேக விழாவில் நடைபெற்றது. அத்தோடு மட்டுமின்றி அங்கிருந்து இளைஞர்கள், பொதுமக்கள், பாதிரியார்களோடு செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்த காட்சி மதத்தால் பிரிந்த போதிலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வில் மதத்தை மிஞ்சிய மனிதநேயத்தை பறைசாற்றியது என்றால் அது மிகை அல்ல.

வீடியோஸ்

அரியலூர்
May 20, 2024, 03:05 IST/அரியலூர்
அரியலூர்

கிறிஸ்தவ பாதிரியார்கள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகம்

May 20, 2024, 03:05 IST