ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைப்பு

70பார்த்தது
ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைப்பு
அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழா-2024 பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா, இன்று (11. 03. 2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பல்துறை அலுவலக வளாகம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர் திருமதி. அன்பரசி. வட்டார அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி