கழுத்துப் பகுதியில் கறுப்பு நிற பட்டைகள் இருப்பது சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஆகும். உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை கழுத்தை கருமையாக மாற்றுகிறது. குழந்தைகளுக்கு கழுத்தில் கறுப்பு பட்டைகள் தோன்றினால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. பெண்களுக்கு ஏற்படும் PCOD, தைராய்டு பிரச்சனை காரணமாகவும் கழுத்து கறுப்பாக மாறும். எனவே வெளிப்பூச்சுகளை தவிர்த்து மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.