18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து

56பார்த்தது
18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து
கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், 4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்துவதில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக கூறியுள்ள உயர் நீதிமன்றம் 18 நியமனங்களை ரத்து செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி