மாநிலங்களவை காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீகார், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, அசாம், ஹரியானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் காலியிடங்கள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறும். காலியாக உள்ள அனைத்து இடங்களுக்கும் செப்டம்பர் 3ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.