‘கஞ்சா உதயநிதி’ பட்டப்பெயர் வைத்த அண்ணாமலை

74பார்த்தது
‘கஞ்சா உதயநிதி’ பட்டப்பெயர் வைத்த அண்ணாமலை
தமிழ்நாடு செலுத்தும் வரியில் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி அளித்து வருவதால், உதயநிதி தொடர்ந்து தனது பிரச்சாரங்களில் பிரதமர் மோடியை ‘29 பைசா மோடி’ என்று விமர்சித்து வருகிறார். இதுபோல தொடர்ந்து பிரதமர் மோடியை ‘29 பைசா மோடி’ என்று உதயநிதி தொடர்ந்து அழைத்து வந்தால், உதயநிதியை இனி நாங்கள் ‘கஞ்சா உதயநிதி’ என்று அழைக்க நேரிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். ஈரோட்டில் பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை இதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி