லண்டன் செல்லும் அண்ணாமலை.. தலைமையில் மாற்றம்?

83பார்த்தது
லண்டன் செல்லும் அண்ணாமலை.. தலைமையில் மாற்றம்?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என சொல்லப்படும் நிலையில், 5 மாதம் இந்தியாவில் இருக்கமாட்டார் என்றும், மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் தான் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 5 மாதங்களில் தமிழக பாஜக தலைமையில்லாமல் இருக்குமா? அல்லது வேறு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்வி கட்சியின் மேல் மட்டத்தில் எழுந்திருக்கிறது. தலைமையில்லாமல் இருக்கும் அந்த 5 மாதங்களும் பாஜகவை வழிநடத்த உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி