சேலம்: மேட்டூரைச் சேர்ந்தவர் முருகன் (35). மனைவி அருணா. இவர்களுக்கு மேகா என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று இரவில் 8 மாத பெண் குழந்தைக்கு தாய் அருணா புட்டிப்பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் படுக்க வைத்துள்ளார். காலையில் பார்த்தபோது குழந்தை வாய், மூக்கில் இருந்து பால் நுரை வந்துள்ளது. உடனே குழந்தையை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.