மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை நவநீத் கெளர் ராணா அறிவிக்கப்பட்டுள்ளார். அமராவதி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய நவநீத் கெளருக்கு, காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் ஆதரவளித்த நிலையில், சிவசேனா வேட்பாளரை 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் தமிழில் கருணாஸ் நடிப்பில் வெளியான 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.