20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகமாக கிடைத்து வந்த பொன்னாங்கன்னி கீரை தற்போது அரிதாகவே கிடைக்கிறது. கண்கள் தொடர்பான பிரச்சனைகளையும் இந்த கீரை சரி செய்யும். கண்ணின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த கீரை வலு சேர்க்கும். பொன்னாங்கன்னி தைலத்தை தலையில் தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும். தலை முடி உதிர்வு பிரச்சனையும் குறையும். வாரத்திற்கு ஒரு முறையாவது இந்தக் கீரையை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.