அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மூன்றெழுத்து மந்திரம் திரும்ப ஒலிக்கப்போகிறது என விஜய் தொடங்கியுள்ள கட்சி பாடலில் இடம்பெற்றுள்ளது என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர்களின் பெயர்களை குறிப்பிட்டால்தான் தங்களது கட்சியை நடத்தமுடியும் என அவர் கூறியுள்ளார். மேலும், விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்டதற்கு அவர்கள் இன்னும் முழுமையாக ஆரம்பிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் என கூறியுள்ளார்.