ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் நேற்று (மே 19) விழுந்து நொறுங்கியது. ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியான், இமாம் செய்யத் முகமது அலி அல் ஹஷேம் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இருவரும் உயிரிழந்ததாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.