அதிமுக படுதோல்வி- மொட்டையடித்துக் கோரிக்கை வைத்த தொண்டர்!

77பார்த்தது
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக படுதோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அக்கட்சியின் தொண்டர் மொட்டை அடித்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆலந்தூர் முன்னாள் துணைத்தலைவர் வைரராசு, இனி வரும் காலங்களில் அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அவர் மொட்டையடித்துக் கொண்டார். இதற்குமுன், சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி