“அ.மலையின் வெத்து வேட்டு பேச்சுக்கள்” - கே.பி முனுசாமி காட்டம்

66பார்த்தது
“அ.மலையின் வெத்து வேட்டு பேச்சுக்கள்” - கே.பி முனுசாமி காட்டம்
அதிமுகவை கடும் சொற்களால் அண்ணாமலை விமர்சித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலடி கொடுத்த வருகின்றனர். அந்த வகையில் கே.பி முனுசாமி பேசும் பொழுது, “அண்ணாமலை செயல்படுவது ஒரு மாதிரி, ஊடகங்களில் பேசுவது ஒரு மாதிரி. பொய் சொல்வதில் வல்லவர். கோயமுத்தூர் தொகுதியில் எவ்வளவு செலவு செய்தார்? என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக வெற்றி பெறும். அந்த சமயம் அண்ணாமலையில் இந்த வெத்து வேட்டு பேச்சுக்கள் புஸ்வானமாக மாறும்” என்றார்.

தொடர்புடைய செய்தி