சேலத்தில் நாளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சறுக்கலை தந்துள்ள நிலையில், சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (ஜுன் 8) ஆலோசனை நடைபெறவுள்ளது. தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்துவார். தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.