சென்னையில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தற்குறி என கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை கொடுத்தார் என கூறியிருந்தார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடி அவர்களின் பெருமையை எடுத்து சொல்லியதற்கு கோடி நன்றிகள் என அதிமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.