நாற்காலிக்காக சண்டையிட்ட அதிமுகவினர் (வீடியோ)

72பார்த்தது
திண்டுக்கல்லில் இன்று அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். மேலும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீனிவாசன் அருகில் யார் அமர்வது என்பது தொடர்பாக நிர்வாகிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நான்தான் உட்காருவேன், நான்தான் உட்காருவேன் என இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: நியூஸ் 10 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி