அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். பாஜக - அதிமுக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்குத்தான் இபிஎஸ் திடீரென டெல்லி சென்றுள்ளார் என பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.