தவெக உடன் அதிமுக கூட்டணி என்று சொன்னது யார்? என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று (நவ., 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்கள் பல செய்திகளை வெளியிடுகின்றன. யூகத்தின் அடிப்படையிலும் வெளியிடுகின்றன. இதற்கெல்லாம் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக பதில் சொல்ல வேண்டியதில்லை. இதற்கான பதிலை இபிஎஸ் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லுவார்.