பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்க்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் எம்எல்ஏ, அமைச்சர் பொறுப்புகளை பொன்முடி இழந்தார். இந்த நிலையில், அவர் வகித்து வந்த உயர்க்கல்வித்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது.