ஹிண்டன்பர்க் சர்ச்சையில் இருந்து மீண்டு, முன்னணி பன்முக நிறுவனமான
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம்
அதானி, தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, கெளதம்
அதானி தலைமையிலான
அதானி குழுமம் தற்போது தனது உயர் அதிகாரிகளுக்கான ஜெட் விமானங்களை இரட்டிப்பாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆறு Pilatus PC-24 விமானங்கள் அவற்றின் போக்குவரத்துக்காக ஆர்டர் செய்யப்பட்டதாக பல தகவல்கள் வெளிவந்துள்ளது.