பாலியல் புகாரில் இருந்து நடிகர் நிவின் பாலி விடுவிப்பு

66பார்த்தது
பாலியல் புகாரில் இருந்து நடிகர் நிவின் பாலி விடுவிப்பு
பாலியல் புகாரில் இருந்து மலையாள நடிகர் நிவின் பாலி விடுவிக்கப்பட்டுள்ளார். பெண் அளித்த பாலியல் புகார் போலியானது என காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. படவாய்ப்பு தருவதாக கூறி நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் கூறியிருந்த நிலையில், புகார் கூறப்பட்ட நாளில் நிவின் பாலி சம்பவ இடத்தில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. நிவின் பாலி நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி