அரசு நிறுவனமான ஆவின், மக்களுக்குத் தேவையான பால், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சென்னையில் தினசரி ஆவின் பால் 14.50 லட்சம் லிட்டர் விற்பனையாகும். இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காரணமாக கடந்த 2 நாட்களில் 2 லட்சம் லிட்டர் என பால் விற்பனை குறைந்துள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பால் விற்பனை குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.