டெல்டா பகுதி பெண்கள் கொண்டாடும் ஆடிப்பெருக்கு.!

70பார்த்தது
டெல்டா பகுதி பெண்கள் கொண்டாடும் ஆடிப்பெருக்கு.!
காவிரி நதி பாயும் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் ஆடி 18ம் தேதியன்று காவிரி ஆற்றங்கரையில் கூடுவர். காதோலை, கருகமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் வைத்து காவிரி தாயை வழிபடுவர். பின்னர் ஆற்றங்கரையில் புதுத்தாலி மாற்றிக் கொள்வதும், சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறுகள் கட்டிக் கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை போன்ற மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி