பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பதிண்டா கிராமத்தைச் சேர்ந்த சுக்வீர் சிங் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி பல முறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் தன்னை ஏமாற்றியதாக சுக்வீர் சிங் மீது இளம்பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.