சிறுவர்களுக்கு சூடு வைத்த பெண் - வன்கொடுமை பிரிவில் வழக்கு

16010பார்த்தது
சிறுவர்களுக்கு சூடு வைத்த பெண் - வன்கொடுமை பிரிவில் வழக்கு
கன்னியாகுமரி: கொல்லங்கோடு அருகே மஞ்சதோப்பு பகுதி சேர்ந்தவர் அருள்தாசன். மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி ஷைஜி (29) இந்த தம்பதிக்கு பத்து மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள் உண்டு. இந்த சிறுவர்கள் கடந்த 9ஆம் தேதி காலை பக்கத்து வீட்டு மரத்தில் உள்ள பிஞ்சு மாங்காய் பறித்து தின்றுள்ளனர். இதை கவனித்த பக்கத்து வீட்டில் வசிக்கும் கலா (42) என்பவர் சிறுவர்களை மடக்கி பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்று நாற்காலியில் கட்டி வைத்து கை, கால் உட்பட பல பகுதிகளில் தீயால் சூடு வைத்து அனுப்பியுள்ளார்.

இதையடுத்து சிறுவர்கள் ரெண்டு பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்களின் தாய் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கலா மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். உடலில் சூடு வைத்த கலாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி