ஸ்ரீபெரும்புதூரில் அருள்புரியும் ராமானுஜருக்கு தீபாவளி முதல் தை மாதம் வரை வெந்நீரால் அபிஷேகம் செய்கின்றனர். குளிர்காலம் என்பதால் ராமானுஜருக்கு கோட், கம்பளி உள்ளிட்டவையும் போர்த்தப்படுகிறது. உடல் முழுவதும் போர்த்த வெல்வெட்டாலான அங்கி, உல்லன் சால்வை, தலை முதல் பாதம் வரை போர்த்தும் 'குன்சன்' என்னும் ஆடையும் அணிவிக்கப்படுகிறது. மாசி முதல் புரட்டாசி வரையிலான கோடை காலத்தில் குளிர்ச்சிப்படுத்த சந்தன காப்பும் இடப்படுகிறது.