திருப்பூர் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40) இறைச்சி கடை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது நண்பர்களான முத்துராஜா (39), வடிவேல் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அச்சமயத்தில் கார்த்தி, முத்துராஜாவின் மனைவி குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜா, கார்த்தியை கறிவெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த கார்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நல்லூர் போலீசார் முத்துராஜாவை கைது செய்தனர்.