பார்வை திறன் குறைபாடு கொண்ட 23 நபர்களை பெரிய பூங்காவிற்கு அழைத்துச் சென்று தீபாவளி கொண்டாட்டத்தில் தனியார் நிறுவனம் ஈடுபடுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பார்வை திறன் குறைபாடு கொண்ட பெண் ஒருவர் கூறுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் வீட்டில் கூட இப்படி அழைத்து சென்றதில்லை. இது போன்ற பெரிய பூங்காவிற்கு நாங்கள் வருவது முதல் முறை” என்றார்.