எரி பொருள் எடுத்து சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து!

58பார்த்தது
எரி பொருள் எடுத்து சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் சிகாகோவில் இருந்து புரொப்பேன் என்ற எரி பொருளை எடுத்து கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. அந்த ரெயிலானது சிகாகோவின் மேட்சன் கிராமத்திற்கு அருகே சென்ற போது ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நடைபெற்றதால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி