சீமான் பேசும்போது குறுக்கிட்ட "ரத்தக்கொதிப்பு"

65892பார்த்தது
தேர்தல் ஆணையத்தால் நாம் தமிழர் கட்சிக்கு "மைக்" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, கடைசி நொடி வரை நான் போராடி பார்த்தேன் ஆனால் அது சரியாக வரவில்லை அதனால் மைக் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளோம் என பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவரின் செல்போனில் "ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு" என்ற கானா பாடல் ஒலித்தது. இதனால் டென்ஷனான சீமான் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தார். பின்னர் தனது பேச்சை தொடர்ந்தார்.

தொடர்புடைய செய்தி