ஓடும் ஆம்புலன்ஸில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்

53பார்த்தது
ஓடும் ஆம்புலன்ஸில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்
மத்தியப் பிரதேசம் மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹனுமனா தாலுகாவில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஆம்புலன்ஸில் வைத்து, 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரேந்திர சதுர்வேதி மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் கேவட் ஆகியோரை நேற்று (நவ.27) இரவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி