பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள பாபா சித்தநாத் கோயிலில் இன்று காலை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.