தேசிய தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெயிலில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த கோடை வெயிலின் காரணமாக வட மாநிலங்களின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களில் சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் வெப்ப தாக்குதலுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.